ஜேம்ஸ் வெப்'(USA) தொலைநோக்கி.வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

 ome

 'ஜேம்ஸ் வெப்'(USA) தொலைநோக்கி.வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி.

அதிக பொருட்செலவில் 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா.

இதுவரை அல்லாத அளவிற்கு பால்வளி அண்டத்தில் சூரிய குடும்பம் அல்லாத பிற கோள்களை துல்லியமாக கண்டறிய 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை விண்ணில் செலுத்தியிருக்கிறது நாசா. இந்த தொலைநோக்கியின் எடை கிட்டத்தட்ட 6000 கிலோ எனத் தெரிவித்திருக்கிறது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களை தெளிவாக ஆய்வுசெய்ய திட்டமிட்டு நாசா 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியிருக்கிறது. இந்த தொலைநோக்கியின் ஆயுட்காலம் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது.


பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை அறிவதற்காக விண்வெளியில் தொலைநோக்கியை நிலைநிறுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்துகொள்ள வழி வகுத்தது.

அதன் அடிப்படையில் நாசா ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்த திட்டமிட்டனர். 1989-ல் தொடங்கப்பட்ட, ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம், தற்போதுதான் நிறைவேறியுள்ளது.

இந்நிலையில், இந்த விண்வெளி தொலைநோக்கி அதிநவீன ராக்கெட் மூலம், பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் இது சுமார் 9,30,000 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்தது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவப்படும் காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது நாசா.

1960-களில் நாசாவின் பல விண்வெளி செயல்பாடுகளுக்கு காரணமான முக்கிய விஞ்ஞானியான ஜேம்ஸ் இ வெப்பின் நினைவாக புதிய தொலைநோக்கிக்கு ஜேம்ஸ் வெப் என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த தொலைநோக்கி வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ளதால் பிரபஞ்ச ரகசியங்கள், நெபுலாக்கள், நட்சத்திரங்கள் உருவாக்கம், பூமி உருவான விதம் உள்ளிட்ட அரிய தகவல்களை விஞ்ஞானிகளால் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது





மேலும் இந்த தொலைநோக்கியை நிலையான சுற்றுவட்ட பாதையில் கொண்டு சேர்க்க 30 நாட்கள் ஆகும் என்றும், அதன்பிறகு விண்வெளியில் எடுக்கப்படும் புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பும் பணியை இந்த தொலைநோக்கி தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.



    முனைவர் ஏ.வினோத்  , இயற்பியல் உதவி பேராசிரியர், இயற்பியல் துறை ,அப்பல்லோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை ,9442426838,vinobrother1@gmail.com

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.


மாணவர்கள் day to day life in physics  தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும்,vinobrlother1@gmail.com,   மெயில், அல்லது 9442426838  வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                


Comments

Popular posts from this blog

டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல், வேதியியல் அறிவியலாளர் அரால்டு கிளேட்டன் யுரே நினைவு தினம் இன்று (ஜனவரி 5, 1981).

போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894).

அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற இராபெர்ட் உட்ரோ வில்சன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 10, 1936).