Posts

Showing posts from December, 2021

போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894).

Image
  போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894). சத்தியேந்திர நாத் போஸ் ( Satyendra Nath Bose)  ஜனவரி  1, 1894 ல்   கொல்கத்தாவில் பிறந்தார்.   பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில்   பெற்றிருந்தார் .  காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்தது தான்.  பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார். இவர் கல்கத்தா மாநில கல்லூரியில் பயின்ற காலம் வங்கத்தின் பொற்காலம் .   ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது. குவாண்டம் மெக்கானிக்ஸ் என்கிற துறையின் உட்பிரிவான குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் இவரால் தான் உருவானது .   வெறும் அறிவியலில் மட்டும் நாட்டம் கொண்டிருக்கவில்லை அவர். ஐந்து மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் இசை வல்லுனரும் கூட.   குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த பிளாங்கின்  ' தெர்மோடைனமிக் உண்ட்...