Posts

Showing posts from May, 2022

இன்று (ஏப்ரல் 4, 1855). தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய சிறந்த தமிழ் அறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 4, 1855).

Image
  தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய சிறந்த தமிழ் அறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 4, 1855). தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய சிறந்த தமிழ் அறிஞர்   மனோன்மணியம் பெ.சுந்தரனார்   பிறந்த   நாள் இன்று  ( ஏப்ரல்  4, 1855).   மனோன்மணியம் பெ.சுந்தரனார்   ஏப்ரல்  4, 1855 ல்   கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தார். சுந்தரனாரின் முன்னோர் நெசவுத் தொழில் செய்த மக்களுக்கு சலுகை கொடுக்கப் பட்டதால் ஆலப் புழைக்குக் குடி பெயர்ந்த வேளாளர் குடும்பங்களில் ஒன்று .  இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் , 1876 ல் ,  இளங்கலைப் பட்டத்தை பெற்றார்.  1877 ல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார்.  திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி ,...

இன்று (ஏப்ரல் 4, 1617). மடக்கை அட்டவணை கண்டுபிடித்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர், இயற்பியலாளர் ஜான் நேப்பியர் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 4, 1617).

Image
  மடக்கை அட்டவணை கண்டுபிடித்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர், இயற்பியலாளர் ஜான் நேப்பியர் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 4, 1617). மடக்கை அட்டவணை   கண்டுபிடித்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர் ,  இயற்பியலாளர்   ஜான் நேப்பியர்   நினைவு நாள் இன்று (ஏப்ரல்  4, 1617).   ஜான் நேப்பியர் ( John Napier)  ஸ்கொட்லாந்து நாட்டிலுள்ள எடின்பா்க் நகரின் அருகே அமைந்துள்ள “மொ்சிஸ்டன் காஸில்” என்னும் இடத்தில் , 1550 ம் ஆண்டு பிறந்தார்.   தன்னுடைய பதிமூன்றாவது வயதிலேயே ஆண்ட்ருஸ் பல்கழைக்கழத்தில் சேர்ந்தார்.  எனினும் அங்கு அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை.  அவா் பட்டம் எதுவும் பெறாமலே அக்கல்லூரியை விட்டு விலகினார்.   நேப்பியர் அதன் பிறகு பல வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றார்.   1571 ம் ஆண்டு தன் சொந்த ஊருக்கே திரும்பி வந்தார்.  1572 ம் ஆண்டு நேப்பியரின் திருமணம் நடைபெற்றது.  ஆனால் அவரது மனைவி ஏழு ஆண்டுகளில் மரணம் அடைந்தார்.  எனவே அவர் மறுமணம் புரிந்தார்.   நேப்பியர் கிறிஸ்தவ மதத்தில் அதிக நம்பிக்கை வ...

இன்று (ஏப்ரல் 4, 1929). பெட்ரோல் எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் இயந்திரவியலாளர் கார்ல் பிரீட்ரிச் பென்ஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 4, 1929).

Image
  பெட்ரோல் எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் இயந்திரவியலாளர் கார்ல் பிரீட்ரிச் பென்ஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 4, 1929). பெட்ரோல் எந்திரத்தைக் கண்டுபிடித்த   ஜெர்மன் இயந்திரவியலாளர்   கார்ல் பிரீட்ரிச் பென்ஸ்   நினைவு நாள் இன்று (ஏப்ரல்  4, 1929).   கார்ல் பிரீட்ரிச் பென்ஸ்   (Carl Friedrich Benz)  நவம்பர்  25, 1844 ல்   ஜெர்மனி பாடன் பகுதியில் ஜோசெபின் வைல்லன்ட் ,  ஜோஹன் ஜார்ஜ் பென்ஸ் தம்பதிக்கு   பிறந்தார். இவரது இரண்டாம் வயதில் தந்தையை ரயில் விபத்தில் இழந்தார்.  தந்தையின் இழப்பிற்குப் பின்னர் வறுமையில் வாடினாலும் தாயார் நல்ல கல்வியே இவருக்குப் புகட்டினார். இவரது  15 ம் வயதில் இயந்திர பொறியியல் நுழைவுத் தேர்வில் தேறி  19 ம் வயதில் பட்டதாரி ஆனார்.   பட்டம் பெற்றதும் பல நிறுவனங்களில் இவர் வேலை செய்தார். அப்போது எல்லாம் பென்சின் கவனம் மிதிவண்டியையும் குதிரை வண்டியையும் எப்படி ஆள் பலம் இல்லாமல் இயக்குவது என்ற பார்வையிலேயே அமைந்தது.  இவர் பல்வேறு பயிற்சி நிறுவனக்களுக்கு மாற வேண்டியிருந்தது. மேலும் பாலக் க...

இன்று (ஏப்ரல் 4, 1846). முதன் முறையாக நைட்ரஜனை (Nitrogen) திரவமாக்கிய சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ரவுல் பியேர் பிக்டே பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 4, 1846).

Image
  முதன் முறையாக நைட்ரஜனை (Nitrogen) திரவமாக்கிய சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ரவுல் பியேர் பிக்டே பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 4, 1846). முதன் முறையாக நைட்ரஜனை ( Nitrogen)  திரவமாக்கிய சுவிட்சர்லாந்து இயற்பியலாளர்    ரவுல்   பியேர் பிக்டே பிறந்த தினம்   இன்று (ஏப்ரல்  4, 1846).   ரவுல்   பியேர் பிக்டே   ( Raoul Pierre Pictet)   ஏப்ரல்  4,   1846 ல்   சுவிட்சர்லாந்து ஜெனீவாவில்   பிறந்தார் .  ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் குறைந்த வெப்பநிலைகளைப் பெறுதலிலும் ,  வளிமங்களைத் திரவமாக்குவதிலும் ,  திண்மமாக்குவதிலும் இருந்தன.   டிசம்பர்  22,1877 ல்   பாரிசில் உள்ள அறிவியல் கழகத்திற்கு ஜெனீவாவில் இருந்து பிக்டே அனுப்பியிருந்த ஒரு தந்தியில் பின்வருமாறு குறிக்கப்பட்டிருந்தது .  சல்பூரசு மற்றும் கார்போனிக் காடிகளைப் பயன்படுத்தி  320  வளிமண்டல அழுத்தத்திலும் , 140  பாகை குளிரிலும் இன்று ஆக்சிசன் திரவமாக்கப்பட்டது. இவ்வறிவி...

இன்று (ஏப்ரல் 3, 1998). ஒழுங்கின்மைக்கு கோட்பாடு கண்ட ஆங்கில கணிதவியலாளர் டேம் மேரி லூசி கார்ட்ரைட் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 3, 1998).

Image
  ஒழுங்கின்மைக்கு கோட்பாடு கண்ட ஆங்கில கணிதவியலாளர் டேம் மேரி லூசி கார்ட்ரைட் நினைவு நாள் ஒழுங்கின்மைக்கு கோட்பாடு கண்ட ஆங்கில கணிதவியலாளர் டேம் மேரி லூசி கார்ட்ரைட் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 3, 1998). ஒழுங்கின்மைக்கு கோட்பாடு கண்ட   ஆங்கில கணிதவியலாளர்   டேம் மேரி லூசி கார்ட்ரைட்   நினைவு நாள் இன்று  ( ஏப்ரல்  3, 1998).   டேம் மேரி லூசி கார்ட்ரைட் ( Mary Cartwright)  டிசம்பர் 17 ,  1900ல் இங்கிலாந்து   ஐன்ஹொவில் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் டிங்பை கார்ட்ரைட் தேவாலயத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். லெமிங்டன் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார் .  இவருக்குப் பள்ளியில் வரலாறு பிடித்த பாடமாக இருந்தது. தனது பள்ளிப் படிப்பை முடித்த கார்ட்ரைட் ,  அக்டோபர் மாதம்  1919 ல் உலக  புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பிற்காகச் சேர்ந்தார்.   உயர் படிப்பில் மேரி கணிதத்தைத் தேர்ந்தெடுத்தார். அப்பொழுது ,  இவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து பெண்களே அந்தப் பல்கலைக்கழகத்தில் ...