நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கி முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்ட, ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 11, 1786).

 

நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கி முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்ட, ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 11, 1786).

நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கி முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்ட, ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 11, 1786).

ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் (Joseph Jackson Lister) ஜனவரி 11, 1786ல் ஜான் லிஸ்டரின் 49 வது வயதில் லண்டனில் உள்ள யார்க்சைர் என்ற இடத்தில் பிறந்த கடைசி மகனாக பிறந்தார். நவீன அறுவை சிகிச்சையின் தந்தையாகிய ஜோசப் லிஸ்டரின் தந்தை ஆவார். அன்னையின் பெயர் மேரி. ஜோசப்பிற்கு சிறு வயதிலேயேகண்ணாடிப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. 1800களில் பள்ளிப் படிப்பை அரைகுறையாய் முடித்த ஜோசப் ஜாக்சன்தனது 14 ஆவது வயதில் தன் தந்தையுடன் இணைந்து லோத்புரி என்ற ஊரில் மதுபான விற்பனையைக் கவனித்து வந்தார். அதில் அவர் சிறப்பாகச் செயல்பட்டதால் நான்கு ஆண்டுகளுக்குப்பின்அதன் பங்குதாரராகவும் ஆனார். தனது 32 ஆவது வயதில், 26 வயதுள்ள இசபெல்லா என்பவரை மணந்தார். பிறகு 1821ல் தனது மைத்துனருடன்கப்பல் வணிகத்துக்குப் புறப்பட்டார். இவர்களுக்கு மேரிஜான்இசபெல்லா சோபியாஜோசப்வில்லியம் ஹென்றிஆர்தர் ஹூக் ஆகிய ஐந்து மக்கள் பிறந்தனர். 


நுண்நோக்கிகளும்தொலைநோக்கிகளும், 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டாலும்அதில் நிறைய குறைகள் இருந்தன. முக்கியமாகஉருவங்கள் தெளிவாகத் தெரியாமல்கலங்கலாகத் தெரிந்தது வந்தன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டும் கூடஇந்தப் பிரச்சினை பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இயற்கையில் கண்ணாடிப் பொருட்களில் ஆர்வமுடைய ஜாக்சன் உருப்பெருக்கியின் 'அபரேஷன்' (aberration) எனப்படும் உருவம் மங்கலாகத் தெரியும் பிரச்சினைக்கு முடிவு கட்டினார். ஒரு நுண்நோக்கியை 1826ல் உருவாக்கி அதில் ஆடிகள் மூலம் தெளிவாக அருகாமைப் பொருட்களையும்தொலைவிலுள்ள பொருட்களையும் பார்க்க வகை செய்தார். நுண்ணோக்கி வழியே திசுக்களைப் பார்த்து அதனைப் பற்றிய கல்வியை வளர்த்துக்கொண்டார். அவரது நுண்ணோக்கி உருவாக்கத்துக்குப் பின்உயிரியல் மிக வேகமாக வளர்ந்தது. நுண்ணோக்கி தொழிலும் வளர்ந்தது. 



Red Blood Cells National Geographic GIF - RedBloodCells NationalGeographic  Arteries - Discover & Share GIFs

முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்டவர்மற்றவர்களுக்குக் காண்பித்தவர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் ஆவார். ஜாக்சன் லிஸ்டர் உருவாக்கிய நுண்ணோக்கி இலண்டன் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1832ல்இங்கிலாந்தின் வேந்தியக் கழகத்தில் (fellowship of the Royal Society) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1846ல் தனது மகன் ஜான் இளவதிலேயே இறந்தபின் இவரும் இவருடைய மனைவி இசபெல்லாவும் ஆறு ஆண்டுகள் அப்டன் என்ற இடத்தில் தனியாக வசித்தனர். இவரது மற்றொரு மகனான வில்லியம் ஹென்றியும் தீராத நோயினால் 1864ல் இறந்தார். முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்ட, ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்  அக்டோபர் 24, 1869ல் தனது 84வது அகவையில் அப்டனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia


  • இது போன்ற தகவல் பெற

     

    நன்றி.

    முனைவர் ஏ.வினோத்  , இயற்பியல் உதவி பேராசிரியர், இயற்பியல் துறை ,அப்பல்லோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை ,9442426838,vinobrother1@gmail.com

    இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.


    மாணவர்கள் day to day life in physics  தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும்,vinobrlother1@gmail.com,   மெயில், அல்லது 9442426838  வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                               

     


Comments

Popular posts from this blog

டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல், வேதியியல் அறிவியலாளர் அரால்டு கிளேட்டன் யுரே நினைவு தினம் இன்று (ஜனவரி 5, 1981).

போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894).

அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற இராபெர்ட் உட்ரோ வில்சன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 10, 1936).